'சலார்' : ரீ-ரிலீஸான முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

ஐதராபாத்,
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘சலார்’. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி வெளியான இப்படம் ரூ. 700 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது இதன் 2-ம் பாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தசூழலில், கடந்த 21-ம் தேதி சலார் திரைப்படம் ரீ-ரிலீஸானது. ரீ-ரிலீசான முதல் நாளே வசூலை குவித்துள்ளது. அதன்படி, சலார் முதல் நாளில் ரூ. 3.24 கோடி வசூலைப் பெற்றுள்ளது. எந்த சிறப்பு நிகழ்வும் இல்லாமல் மறு வெளியீடாகி இந்த அளவு வசூலைப் பெற்றுள்ளது.
சலார் திரைப்படம் குறைவான திரையரங்குகளில் மட்டுமே மறு வெளியீடானாலும் அதிக அளவில் பார்வையாளர்கள் வந்துள்ளனர்.