'சர்தார் 2' படப்பிடிப்பு தள புகைப்படத்தை பகிர்ந்த நடிகை

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘சர்தார்’. பி.எஸ். மித்ரன் இயக்கிய இப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமான ‘சர்தார் 2’ உருவாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
‘சர்தார் 2’ படம் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், நடிகை ஆஷிகா ரங்கநாத் படப்பிடிப்பு தளத்தில் கார்த்தியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.