"சயாரா" படம் : 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

இயக்குனர் மோஹித் சூரி இயக்கத்தில், அறிமுக நடிகர் அஹான் பாண்டே , நடிகை அனீத் பத்தா நடித்த ‘சாயரா’ திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இந்தப் படத்திற்கு இளம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. நான்கு நாட்களில் இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்தது.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ‘சயாரா’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகி பெரிய ஓபனிங் கொடுத்த 3-வது படமாக ‘சயாரா’ சாதனை படைத்திருக்கிறது.
தற்போது உலக அளவில் இப்படம் ரூ 256 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ரூ212.5 கோடி, வெளிநாடுகளில் ரூ43.5 கோடி வசூலைக் கடந்துள்ளது. எப்படியும் ரூ 400 கோடி வசூலைக் கடக்கும் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இந்த ஆண்டின் அதிக வரும் பெற்ற படங்களில் ராஷ்மிகாவின் ‘சாவா’ படத்திற்கு அடுத்து இந்தப்படம் இரண்டாவது இடத்தைப் பெற வாய்ப்புள்ளது.