சம்யுக்தாவின் பான் இந்திய படம்…வைரலாகும் பர்ஸ்ட் லுக்|first look of samyuktha menon pan indian action drama the black gold

சென்னை,
கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான ”பாப்கார்ன்” மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் சம்யுக்தா. அதில் அவர் ஷைன் டாம் சாக்கோவுடன் நடித்தார்.
பின்னர் ‘பீம்லா நாயக்’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன் பிறகு, ‘பிம்பிசாரா’, ‘சார்’ மற்றும் ‘விருபக்சா’ போன்ற சூப்பர் ஹிட் படங்களின் மூலம் தெலுங்கு பார்வையாளர்களுக்கு நெருக்கமாகிவிட்டார்.
தமிழில் இவர் தனுஷுடன் வாத்தி படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், இவர் நடிக்கும் பான் இந்திய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. ’தி பிளாக் கோல்டு’ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை யோகேஷ் இயக்குகிறார்.