சமூகத்தில் நிகழும் வன்முறைகளுக்கு சினிமா தான் காரணமா? – மத்திய மந்திரி சுரேஷ் கோபி | Is cinema responsible for the violence in society?

திருவனந்தபுரம்,
மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரியாக இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி. இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அப்போது, ‘சமூகத்தில் நிகழும் வன்முறை சம்பவங்களுக்கு சினிமாவின் பங்கு குறித்து சுரேஷ் கோபியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “படம் பார்ப்பவர்கள் வெறுமனே படத்தை பார்க்காமல், அதைப் புரிந்து கொள்ள வேண்டும். திரைப்படங்களில் வன்முறையை காட்டக்கூடாது, குறைக்க வேண்டும் என்று என்னால் சொல்ல முடியாது. அவை பொழுதுபோக்கிற்காக காட்டப்படுகின்றன, இதுபோன்ற செயல்கள் நல்லதல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் நிகழும் வன்முறைகளில் சினிமாவின் பங்கு இருக்கலாம், ஆனால் அதற்கு சினிமாதான் காரணம் என்று சொல்ல முடியாது” நடிகரும் மந்திரியுமான சுரேஷ் கோபி பதிலளித்துள்ளார்.
மேலும், “ஒவ்வொரு குழந்தையும் தேசம் என்று அழைக்கப்படும் குடும்பத்தில் பிறக்கிறது. அவர்களில் யாரும் இழக்கப்படக்கூடாது,” என்றும் கோழிக்கோட்டில் ஒரு தனியார் டியூஷன் சென்டர் அருகே மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பள்ளி மாணவர் இறந்ததையும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.