சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆன்மீக திரைப்படம் "ராகு -கேது"

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ராகு -கேது’. தமிழின் புகழ்மிகு இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்குப் பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழில் சாமி படங்களும் புராண படங்களும் வரவில்ல எனும் ஏக்கத்தை போக்கும் வகையில் இப்படம் ஆன்மிக ரசிகர்களை மகிழ்விக்கு அருமைமிகு படைப்பாக உருவாகியுள்ளது.
ராகுகேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி துர்கையாகவும், விக்னேஷ் மகா விஷ்ணுவாகவும் நடித்துள்ளனர். மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தினை அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கும் வகையில் ‘யு’ சான்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை தமிழரசன் தியேட்டர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாந்தி பாலசுந்தரம் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் பரணிதரன் பின்னணி இசையமைத்துள்ளார், இப்படம் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வெளியாகிறது.