சமந்தாவை சந்தித்த நடிகை கீர்த்தி சுரேஷ்

சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த ‘விண்ணைதாண்டி வருவாயா’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ‘பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம், அஞ்சான்’ என பல படங்களில் நடித்து பிரபலமானார்.அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா. ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கிடைக்காமலே இருந்தது. அந்த சமயத்தில் 2014-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து ‘தெறி, மெர்சல்’ என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
கடைசியாக தமிழ் சினிமாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். இந்த 2 படங்களுமெ போதுமான ரீச் கொடுக்கவில்லை. அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். மீண்டும் முன்புபோல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தில் தனது திரை பயணத்தை தொடங்கினார். அதற்கு அடுத்தபடியாக அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. விஜய், சூர்யா, விக்ரம் என வரிசையாக முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கீர்த்திக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையை கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு சைரன், ரகுதாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்திலும் கமிட்டானார். அதில் வருண் தவான் ஹீரோவாக நடித்திருந்தார். அட்லீ படத்தை தயாரித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படம் படுதோல்வியை சந்தித்தது. நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு தனது காதலரான ஆண்டனி தட்டிலை கோவாவில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் முழு ஆர்வத்துடன் இருக்கும் அவர் இன்னொரு பாலிவுட் படத்தில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை சமந்தாவை கீர்த்தி சுரேஷ் சந்தித்திருக்கிறார். இரண்டு பேரும் உணவு அருந்தும்படி இருந்த புகைப்படத்தை பகிர்ந்து, “மதிய உணவுக்கு அமர்ந்தோம். சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு எழுந்தோம்” என்று சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனையடுத்து என்ன விசேஷமாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.