சப்தம் படத்தின் 'கிராண்மா' வீடியோ பாடல் வெளியீடு

சென்னை,
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிப்பில் உருவான படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி, ‘ரூபன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
சத்தங்களை வைத்து அமானுஷ்ய சக்திகளை கண்டறியும் நிபுணராக ஆதி நடித்துள்ளார். சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தற்போது இப்படத்தில் இருந்து ‘கிராண்மா’ என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.