சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு; முன்ஜாமின் பெற்ற டைரக்டர் பா.ரஞ்சித்

நாகப்பட்டினம்
டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆர்யா, கலையரசன் உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதனிடையே, இப்படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினத்தில் நடந்துவந்த நிலையில், கடந்த 13ம் தேதி சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது இப்படத்தில் பணியாற்றிய சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் கார் சேசிங் சண்டை காட்சியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அலட்சியமாக செயல்பட்டது, கவனக்குறைவாக இருந்தது உள்பட 3 பிரிவுகளின்கீழ் டைரக்டர் பா. ரஞ்சித், ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகிய 4 பேர் மீது கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழப்பு சம்பவத்தில் தொடரப்பட்ட வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி டைரக்டர் பா.ரஞ்சித் நாகை கீழ்வேளூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த கோர்ட்டு, பா.ரஞ்சித்திற்கு முன் ஜாமின் வழங்கியுள்ளது.