‘சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள்’ – நடிகை ரம்யா | ‘Don’t take the law into your own hands’

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடா உள்பட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. இதுகுறித்து நடிகை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், “நேற்று சுப்ரீம் கோர்ட்டு ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் மற்றும் பிறரின் ஜாமீனை ரத்து செய்து ஒரு வலுவான செய்தியை கூறியுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். பிறருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நீதித்துறை மீது நம்பிக்கை வையுங்கள். சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள். நீதி நிலைநாட்டப்படும். முக்கியமாக உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, இந்த கொலை வழக்கில் தர்ஷனுக்கு எதிராக நடிகை ரம்யா கருத்து கூறியதால், அவரை தர்ஷனின் ரசிகர்கள் ஆபாசமாகவும், அவதூறாகவும் சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவிட்டனர். இதுபற்றிய புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடிவருவது குறிப்பிடத்தக்கது.