சடலத்துடன் பாலியல் உறவு.. இது வன்கொடுமை குற்றமே கிடையாது -சொன்னது யார் தெரியுமா?

சடலத்துடன் பாலியல் உறவு.. இது வன்கொடுமை குற்றமே கிடையாது -சொன்னது யார் தெரியுமா?


  சடலத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்து உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

  சடலத்துடன் செக்ஸ் 

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு 9 வயது தலித் சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டர். தொடர்ந்து காவலர்கள் பல்வேறு இடங்களில் சிறுமியைத் தேடிய போது கிடைக்கவில்லை.

சடலத்துடன் உடலுறவு

ஆனால் நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.இதனை தொடர்ந்து சிமியின் உடல் பிரேதபரிசோனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிறுமி கொல்லப்பட்ட பின்னரும் சடலத்துடன் உடலுறவில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டதில் நீல்காந்த், நீல்சந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 சத்தீஸ்கர் 

இவர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நீல்காந்த் போக்சோ வழக்கிலிருந்து விடுவிக்க கோரி நீதிமன்றத்தை அணுகினார்.அப்போது அவருக்கு போக்சோ குற்றத்திலிருந்து அவரை விடுவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

சடலத்துடன் உடலுறவு

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இது போக்சோ அல்லது கற்பழிப்பு குற்றத்தின் கீழ் வராது. சடலத்துடன் செக்ஸ் வைத்துக்கொள்வது நெக்ரோபிலியா என்று குறிப்பிடப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை குற்றம் என்றால் அதனால் பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருந்திருக்க வேண்டும். வன்கொடுமைக்குப் பிறகு கொலை செய்வது என்பது தனி வழக்கு என்று கூறினர். மேலும் சடலத்துடன் செக்ஸ் என்பது வன்கொடுமை குற்றமாகாது என்று கூறி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *