“சச்சின் படித்தாரா? இளையராஜா படித்தாரா?… ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு|Director Tamilarasan Pachamuthu’s speech at the Tamil nadu best in education festival

“சச்சின் படித்தாரா? இளையராஜா படித்தாரா?… ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு|Director Tamilarasan Pachamuthu’s speech at the Tamil nadu best in education festival


சென்னை,

தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டமாக ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்நிகழ்வினில் முதல்-அமைச்சர் ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த ரெட்டி கலந்து கொண்டார். இவர்களை தவிர்த்து திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். சிவகார்த்திகேயன், மிஷ்கின், தியாகராஜா குமாரராஜா, பிரேம் குமார், தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேசுகையில், “சச்சின் படித்தாரா? இளையராஜா படித்தாரா?ரகுமான் படித்தாரா? என்று நிறையபேர் சொல்வார்கள். அதை நம்பாதிங்க. அப்படி வெற்றி பெற்றவர்கள் 100 பேர்தான். படித்து வெற்றி பெற்றவர்கள் அவ்ளோவு பேர் இருக்கோம். விதிவிலக்கு எப்போதுமே உதாரணம் ஆகாது படிங்க.. படிங்க.. படிங்க.” என்றார்


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *