சசிகுமார் நடிக்கும் “மை லார்ட்” படத்தின் அப்டேட்

சசிகுமார் நடிக்கும் “மை லார்ட்” படத்தின் அப்டேட்


சென்னை,

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். ‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கருடன், நந்தன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் நடித்த ‘டூரிஸ்ட் பேமலி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதற்கிடையில் “ஜோக்கர், குக்கூ, ஜப்பான்” ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

 ‘மை லார்ட்’ படத்தின் டப்பிங் பணியின் போது எடுத்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் புதிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *