'சங்கராந்திகி வஸ்துன்னம் 2' படத்தை ரிலீஸ் தேதியுடன் உறுதி செய்த வெங்கடேஷ்

ஐதராபாத்,
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’. அனில் ரவிபுடி இயக்கிய இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், உபேந்திரா லிமாயி, சாய்குமார், நரேஷ், வி.டி.வி கணேஷ், ஸ்ரீனிவாஸ் அவசராலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய வெங்கடேஷ், ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பிருப்பதாகவும் அதனை 2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.