கோவையில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி குறித்து வீடியோ வெளியிட்ட இளையராஜா

கோவை,
இசைஞானி இளையராஜா தற்போது படங்களுக்கு இசையமைப்பது குறைந்துள்ளது என்றாலும் அடிக்கடி சில இடங்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார்.
அந்த வகையில் கோவையில் கடந்த 17ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அந்த சமயத்தில் நாடு தற்போது இருக்கும் பதற்றமான சூழல் நிலவியதாகல் இசை நிகழ்ச்சியை வைத்தால் நன்றாக இருக்காது என்பதால் தள்ளி வைத்தார் இளையராஜா. அதன் பின்னர், வருகிற ஜூன் 7ம் தேதி இசைக் கச்சேரி நடைபெறும் என புதிய தேதியை அறிவித்தார்.
இந்த நிலையில், கோவையில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்றை இளையராஜா வெளியிட்டுள்ளார். அதில், “கோவையில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதை நான் நன்றாக அறிவேன். நீங்கள் எல்லாம் இசை நிகழ்ச்சியை மழையில் நனையாமல் கேட்க வேண்டும் என்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. என்னதான் அடாது மழை பெய்தாலும், விடாது எங்களது இசை நிகழ்ச்சி நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.