கோவாவில் ஒன்று கூடிய 90ஸ் திரை நட்சத்திரங்கள்: வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாக்களில் 90 களில் கால கட்டத்தில் முன்னணி நடிகர் நடிகையர்களாக திரையுலகை கலக்கிய நட்சத்திரங்கள் ஆண்டு தோறும் ஒரு இடத்தில் சந்தித்து கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். ஒரே மாதிரியான உடையணிந்து இந்த நடிகர், நடிகைகள் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கோவாவில் ஒன்று கூடியுள்ளனர் 80,90 ஸ் திரைநட்சத்திரங்கள். வெள்ளை நிற ஆடை அணிந்து அவர்கள் வெளியிட்டுள்ள படம் வைரல் ஆகி வருகிறது.
திரை நட்சத்திரங்கள் நிறைந்த இந்த பட்டியலில், மூத்த இயக்குநர்களான கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா மற்றும் பிரபு தேவா உள்ளிட்டோரும் அடங்குவர். இவர்களுடன், 90 ஸ்களில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த முன்னணி நாயகிகளான சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமா சென், மகேஸ்வரி மற்றும் சிவரஞ்சனி ஆகியோரும் இணைந்துள்ளனர். இந்த புகைப்படங்களை நடிகர் நடிகைகள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.