“கோலி சோடா” இயக்குனர் படத்தில் இணைந்த நடிகர் பரத்

சென்னை,
‘கோலி சோடா’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இயக்குனர் விஜய் மில்டன். இவரது இயக்கத்தில் கடைசியாக ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வெளியானது. விஜய் ஆண்டனி நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனை தொடர்ந்து இயக்குனர் விஜய் மில்டன் தற்போது தெலுங்கு நடிகரான ராஜ் தருணை வைத்து புதிய படம் ஒன்றினை இயக்கி வருகிறார். இதில் நடிகை அம்மு அபிராமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பால் டப்பா இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வருகிற 15-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்தநிலையில் விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிகர் பரத் இணைந்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் நடிகர் பரத்தின் டெஸ்ட் லுக் எடுப்பது போன்ற வீடியோக்கள் இடம் பெற்றுள்ளது. பரத் இப்படத்தில் ஒரு ரவுடி கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 8 ஆண்டுகள் இடைவெளிக்கு இவர்களின் கூட்டணி இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.