கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்|Film celebrities congratulate the Indian team for winning the trophy

புதுடெல்லி,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
ஐ.சி.சி. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதி ஆட்டம் துபாயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டி சென்றது.
இந்நிலையில், கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளனர். அதன்படி,
அஜய் தேவ்கன், பாபி தியோல், ஜூனியர் என்.டி.ஆர், அனில் கபூர், அபிசேக் பச்சன், வருண் தவான், விக்கி கவுசல், சுஷ்மிதா சென், அதியா ஷெட்டி, அல்லு அர்ஜுன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






