கோட்டா சீனிவாச ராவின் மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல்|Actor Karthi condoles the demise of Kota Srinivasa Rao

கோட்டா சீனிவாச ராவின் மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல்|Actor Karthi condoles the demise of Kota Srinivasa Rao



ஐதராபாத்,

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் நடிகர் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரகாஷ்ராஜ், குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில்,

“ஒரு லெஜண்டை இழந்திருக்கிறோம். கோட்டா சீனிவாச ராவின் மறைவு வருத்தமளிக்கிறது. சினிமா மீதான அவரது அளப்பரிய காதல், படப்பிடிப்புத் தளத்தில் அவரது உற்சாக குணம், அவர் நடித்த மறக்க முடியாத கதாபாத்திரங்கள் என்றென்றும் நம் மனதில் நிலைத்திருக்கும்” இவ்வாறு தெரிவித்திருக்கிறார். சகுனி, அழகுராஜா உள்ளிட்ட படங்களில் கார்த்தியுடன் கோட்டா சீனிவாச ராவ் நடித்திருக்கிறார்.

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர்.

கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.

தொடர்ந்து அவர் தமிழில், ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ். நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு ‘சுவர்ண சுந்தரி’ என்ற படம் வெளியானது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *