‘கொம்புசீவி’ பட ஹீரோயின் தார்னிகா…பிரபல நடிகையின் மகள் – யார் அவர் தெரியுமா?

சென்னை,
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொன்ராம் இயக்கிய இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த இக்கதையில், ரவுடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக தார்னிகா நடித்துள்ளார். இவர் 90 களில் பிரபலமாக இருந்த நடிகை ராணியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ராணி வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அவரால் கதாநாயகியாக பெரிய வெற்றிகளைக் கொடுக்க முடியவில்லை. அதனால் கவர்ச்சி நடிகை ரூட்டுக்கு மாறினார். அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்றான நாட்டாமை அவருக்குப் பெரும்புகழை தேடித்தந்தது.






