‘கைதி 2’ படப்பிடிப்பு எப்போது?- அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் | When is the shooting of ‘Khaithi 2’?

சென்னை,
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக கடந்த 2019-ல் வெளியான திரைப்படம் ‘கைதி’. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. நடிகர் கார்த்தி மனதில் நிற்கும்படியான ரோலில் நடிக்க கதாநாயகி, பாடல் என எதுவுமே இல்லாமல், கார்த்தியை இதற்குமுன் பார்த்திடாத ஒரு பரிணாமத்தில் காட்டிய படம் ‘கைதி’. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் இதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் நடிகர் கார்த்தி தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், கைதி 2 படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இந்த படத்தின் அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதாவது, “கைதி 2 படத்தின் பிரீ புரொடக்சன் பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளோம். இதற்கிடையில் கார்த்தி டாணாகாரன் பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்குகிறார், எனவே கைதி 2 படப்பிடிப்பு அதன் பிறகு தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.