‘கே-ராம்ப்’ என்பது ஆபாச வார்த்தை இல்லை”

சென்னை,
நடிகர் கிரண் அப்பாவரம் தற்போது நடித்துள்ள படம் ”கே ராம்ப்”. இந்தப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து, இது ஒரு ஆபாச படம் என்று டிரோல் செய்யப்பட்டு வந்தது. டிரெய்லரிலும் சில ஆபாச வார்த்தைகள் இருப்பதால், கே ராம்ப் என்பதும் ஒரு ஆபாச வார்த்தை என்று இணையத்தில் பரவியது.
இந்நிலையில், இதனை இயக்குனர் ஜெயின்ஸ் நானி சமீபத்தில் தெளிவுபடுத்தினார். ”கே ராம்ப்” என்பது ஆபாச வார்த்தை இல்ல என்று அவர் கூறினார்.
அவர் கூறுகையில், “‘கே ராம்ப்” ஒரு ஆபாச வார்த்தை என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. கே ராம்ப் என்றால் கிரண் அப்பாவரம் ராம்ப் . இந்தப் படத்தில் ஹீரோவின் பெயர் குமார் . அதனால்தான் இந்த தலைப்பை அப்படி வைத்தோம். தியேட்டரில் உட்கார்ந்து எல்லோரும் சிரிக்கும் படியான படம் இது” என்றார்.
ஜெயின்ஸ் நானி இயக்கி உள்ள இப்படத்தில் யுக்தி தரேஜா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியாக உள்ளது.