”கே.ஜி.எப்”-ஐ நிராகரித்த ‘பெரிய நடிகர்’…என்ன காரணம் தெரியுமா?|Producer says a ‘Big Star’ declined KGF for this reason

”கே.ஜி.எப்”-ஐ நிராகரித்த ‘பெரிய நடிகர்’…என்ன காரணம் தெரியுமா?|Producer says a ‘Big Star’ declined KGF for this reason


சென்னை,

”கே.ஜி.எப்” படத்தை பெரிய நட்சத்திர நடிகர் ஒருவர் நிராகரித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

யாஷின் ”கே.ஜி.எப்” படம் முதலில் ஒரு பிரபல நட்சத்திரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அனால், அவர் தற்போது கன்னட படங்கள் எங்கு ஓடுகின்றன என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்திருக்கிறார். இதனை தெரிவித்தது வேறுயாறும் இல்லை,கே.ஜி.எப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் சாலுவே கவுடாதான்.

அந்த பெரிய நடிகரின் பெயரை குறிப்பிடாமல், சில ஆண்டுகளுக்கு முன்பு கே.ஜி.எப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு பெரிய நட்சத்திரத்தை அணுகியதாகவும், ஆனால் அப்போது கன்னட படங்களுக்கான சந்தை மிகவும் மோசமாக இருந்ததால் அதில் நடிக்க அவர் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

கேஜிஎப் படத்திற்குப் பிறகு, ஹோம்பலே பிலிம்ஸ், நாட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அடுத்து, காந்தாரா: சாப்டர் 1 படத்தை தயாரித்திருக்கிறது. மேலும், பிரபாஸை மூன்று படங்களுக்கு ஒப்பந்தமும் செய்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *