கேளிக்கை வரி 4 குறைப்பு: முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த கருணாஸ், Entertainment Tax 4 Reduction: Karunas Thanks Chief Minister

சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8%-ல் இருந்து 4%-ல் ஆக குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மகிழ்ச்சியான வரவேற்கத்தக்க செய்தி. தமிழ்நாடு முதல்வர் முகஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த கேளிக்கை வரியை குறைத்தது உண்மையிலேயே இது திரைத்துறையின் வளர்ச்சிக்கு பயனாற்றக்கூடியதாகும். ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரிகளால் சில ஆண்டுகளாக தமிழ்த் திரைத்துறை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால் தமிழ்த்திரையுலகம் நன்மைபெறும். நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டது. இப்போது அந்த கோரிக்கை வெற்றிபெற்றிருக்கிறது.
தமிழ்த் திரைத்துறை சமீபகாலமாக எதிர்கொண்டு வரும் மிக கடினமான சூழலில், இந்த வரிக்குறைப்பு தயாரிப்பாளர்களுக்கு பெரும் கமை குறைப்பாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியால் வீட்டுகளிலேயே அமர்ந்து திரைப்படம் பார்ப்பவர்களுக்கும், அலைபேசி வாயிலாக செயலிகளில் திரைப்படங்களை காணப்பழகி வரும் ரசிகர்களையும் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மீண்டும் அழைத்து வரும் ஒரு நல்ல மாற்றமாகவும் இந்த கேளிக்கை வரி குறைப்பு அமையும் என்று நம்புகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.