கேரள மாநில விருது பெற்ற நடிகர் அகில் விஸ்வநாத் மர்ம மரணம்

கேரள மாநில விருது பெற்ற நடிகர் அகில் விஸ்வநாத் மர்ம மரணம்


மலையாளத்தில் வெளியான ‘சோழா’, ‘ஆபரேஷன் ஜாவா’ உள்பட சில படங்களில் நடித்திருந்தவர், அகில் விஸ்வநாதன். இதில் ‘சோழா’ படத்தில் சிறப்பாக நடித்தற்காக கேரள மாநில அரசின் விருதை கடந்த 2019-ம் ஆண்டு பெற்றார்.

மாணவராக இருந்தபோது தனது சகோதரர் அருணுடன் நடித்த ‘மங்காண்டி’ என்ற தொலைக்காட்சி படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில அரசின் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

திருச்சூரில் உள்ள மத்தத்தூரில் வசித்து வந்த அகில் விஸ்வநாதன், நேற்று காலை வீட்டில் சடலமாக கிடந்தார். அவருடைய தாயார் கீதா வேலைக்குச் செல்வதற்காக புறப்பட்டபோது, அகில் உயிரற்றுக் கிடந்ததைக் கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *