கேரள திரைப்பட விருதின் நடுவர் குழுத்தலைவராக பிரகாஷ் ராஜ் தேர்வு

கொச்சி,
2024ம் ஆண்டின் கேரள மாநில திரைப்பட விருதுகளுக்கான நடுவர் குழுவின் தலைவராக நடிகரும் இயக்குநருமான பிரகாஷ் ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நடுவர் குழுவில் ரஞ்சன் பிரமோத், ஜிபு ஜேக்கப், பாக்யலட்சுமி, காயத்ரி அசோகன், நிதின் லூகாஸ் மற்றும் சந்தோஷ் எச்சிக்கானம் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், தலைவராக பிரகாஷ் ராஜ் தேர்வு செய்யப்பட்டார்.