கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தின் விளம்பரத் தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம்

கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தின் விளம்பரத் தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம்


திருவனந்தபுரம்,

கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் விளம்பர தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கே.எஸ்.ஆர்.டி.சிக்காக மோகன்லால் ஊதியம் பெறாமல் இலவசமாக சேவை செய்ய முன்வந்துள்ளார். இதன்படி கே.எஸ்.ஆர்.டி.சி விளம்பரங்களில் இனி மோகன்லால் இடம்பெறுவார். எந்த கட்டணமும் இன்றி விளம்பர படங்களில் நடிக்கவும் மோகன்லால் சம்மதம் தெரிவித்துள்ளதாக கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தெரிவித்தார்.

மோகன்லாலை வைத்து சில விளம்பர படங்களை எடுக்கவும் கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கேரள அரசு போக்குவரத்து கழகம் மொத்தம் 4,952 பேருந்துகளை இயக்கி வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகாவிற்கும் கேரள அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கேரள அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு டிக்கெட் கட்டணம் மட்டுமின்றி, போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து நிலையங்கள், டெப்போக்களில் கடை வாடகை , பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றின் மூலமும் கணிசமான வருவாய் கிடைக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *