கேரளாவில் விருது வென்ற “அமரன்” திரைப்படம்

கேரளாவில் விருது வென்ற “அமரன்” திரைப்படம்


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘அமரன்’ திரைப்படம் வெளியாயிற்று. இப்படம் இதுவரை சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்படத்திற்கு பல உயரிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சர்வதேச அளவில் ‘அமரன்’ படத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. அமெரிக்காவில் நடக்கும் உலக கலாச்சார திரைப்பட விழாவில் ‘அமரன்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வருடத்திற்கான டாப் 10 ஊக்கமளிக்கும் படங்கள் லிஸ்டில் ‘அமரன்’ திரைப்படம் இடம்பிடித்தது.

இந்நிலையில், கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ வென்றுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்திற்கு கேரள அமைச்சர் வாசவனிடம் விருதை பெற்றுக்கொண்டார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *