கேரளாவில் புதிய சாதனை.. வரலாறு படைத்த “லோகா” திரைப்படம்

டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் – கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான ‘லோகா ‘ படம் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடித்த சாண்டியின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்தின் வசூலை முறியடித்துள்ளது. ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தில் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது. உலகளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், “லோகா சாப்டர் 1” திரைப்படம் கேரளாவில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, மலையாள சினிமாவில் முதல் முறையாக 50,000-க்கும் அதிகமான காட்சிகளை தாண்டிய திரைப்படம் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.