கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் ‘காதலன்’

2019ம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக கென் கருணாஸ் நடித்து இருந்தார் . இவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றது. அதைத் தொடர்ந்து வாத்தி மற்றும் விடுதலை 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். மேதகு என்ற படத்தை இயக்கி சலசலப்பை உருவாக்கிய இயக்குனர் கிட்டு அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘சல்லியர்கள்’. இப்படத்தின் மூலம் கென் கருணாஸ் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது அவரே இயக்கி, படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார்.
‘காதலன்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தின் நாயகிகளாக ஸ்ரீதேவி, அனிஷ்மா மற்றும் பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் ‘கோர்ட்’ தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சுராஜ் வெஞ்சுரமுடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முழுக்க பள்ளியை மையப்படுத்தி நடக்கும் கதை என்று கூறப்படுகிறது. இதன் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். சமீபத்தில் இதன் படப்பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்துக் கொண்டு கென் கருணாஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.