கெனிஷாவின் ஆல்பம் பாடல்: சிறப்பு தோற்றத்தில் ரவிமோகன்

சென்னை,
நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளார். இது குறித்து கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இருவரது பிரிவிற்கும் பாடகி கெனிஷாதான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் ரவிமோகனும், கெனிஷாவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக வந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் கெனிஷா உருவாக்கிய ‘அன்றும் என்றும்’ என்ற இசை ஆல்பம் கடந்த 15-ந்தேதி வெளியானது. ஆல்பத்தில் சிறப்பு தோற்றத்தில் ரவிமோகன் நடித்துள்ளார். ‘நான் போகும் பாதையெல்லாம் நீதானடா, என் தங்கமே செல்லமே, அன்றும் என்றும் அன்பை ஒன்றாக்குமே’ உட்பட பல வரிகளோடு வெளியான பாடலில் கெனிஷா இளம் பெண்களுடன் நடனமாடி உள்ளார். இந்த இசை ஆல்பம் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான பார்வையாளர்களை கடந்து வருகிறது.