''கூலி'' பட ரிலீஸ்… ஊழியர்களுக்கு விடுமுறை கொடுத்த நிறுவனம்

மதுரை,
மதுரையை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று, ரஜினியின் ‘கூலி’ படத்தை பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதன் மூலம் ஹெச்ஆர் (IIR) துறைக்கு அதிக அளவில் விடுப்பு விண்ணப்பங்கள் வருவதை தவிர்க்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வருகிற 14-ம் தேதி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களில் உணவு வழங்கவும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்சன் கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படம் உலக அளவில் வரும் 14ம் தேதி வெளியாகிறது.