“கூலி” படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் ‘கூலி’ திரைப்படம் இன்று வெளியானது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ரசிகர்கள் திரையரங்கை அதிரவிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு மகிழ்ந்தனர்.
படத்தை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், “கூலி திரைப்படம் தலைவரின் தரிசனம்…. தலைவர் மாஸ், ஸ்வாக் அன் ஸ்டைல் பல தருணங்களில் அருமையாக இருந்தது…. ??? பிளாஷ்பேக் பகுதியில் வரும் அந்த சில நிமிடங்கள் ?? படத்தில் நடித்த அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் வாழ்த்துகள்” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.