`கூலி' படத்திற்கு வந்த புதிய சிக்கல்

சென்னை,
தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் வெற்றிப்பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு சென்னை தாண்டி ஐதராபாத். ஜெய்ப்பூர், விசாகபட்டினம் உள்ளிட்ட இடங்களிலும், வெளிநாடுகளிலும் நடந்தது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளதால், போட்டிக்கு வேறு எந்த பெரிய படமும் வராது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே தேதியில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள ‘வார் 2’ படம் வெளியாக உள்ளது. அதனால் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட இந்திய மாநிலங்களிலும் ‘கூலி’ படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.