'கூலி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

சென்னை,
தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தின் வெற்றிப்பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். மேலும் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, ஐதராபாத். ஜெய்ப்பூர், விசாகபட்டினம் உள்ளிட்ட இடங்களிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாகப்பட்டுள்ள, இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த வார இறுதிக்குள் கூலி படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, டி.ராஜேந்தர் பாடிய சிக்கிட்டு பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.