‘கூலி’ படத்தின் ‘சிகித்து வைப்’ பாடலுக்கு நடனமாடும் அனிருத் – வீடியோ வைரல் | Anirudh dances to the song ‘Chikitu Vibe’ from the movie ‘Coolie’

சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தநிலையில், தற்போது சென்னை, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் அமீர்கான் இணைந்து நடித்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
‘சிகித்து வைப்’ என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது. தாளங்கள் ஒலிக்கும் டி.ராஜேந்தர் குரலில் ரஜினியின் நடனம் கவர்கிறது. குறிப்பாக நடன அசைவுகள் ‘வைப்’பை ஏற்படுத்துகின்றன. அனிருத் இசையமைத்த இப்பாடலை டி. ராஜேந்தர் மற்றும் அறிவு பாடியுள்ளனர்.
இந்நிலையில் ‘கூலி’ படத்தின் ‘சிகித்து வைப்’ பாடலுக்கு நடனமாடும் வீடியோவை அனிருத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.