கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள்… சிம்புவை பாராட்டிய கமல்

கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள்… சிம்புவை பாராட்டிய கமல்


சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

‘தக் லைப்’ படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் ‘ஜிங்குச்சா’ பாடல் யூடியூபில் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர்.’தக் லைப்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜிங்குச்சா, சுகர் பேபி, முத்த மழை, விண்வேலி நாயகா , அஞ்சு வண்ண பூவே, ஓ மாரா, எங்கேயோ, லெட்ஸ் பிளே, அஞ்சு வண்ண பூவே ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

‘தக் லைப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், மணிரத்னம், சிம்பு உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் மேடையில் பாடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.

விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “சினிமா பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும், ஆனால் எடுக்கும் போது இருக்காது. நான் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அதில் நான் படம் எடுக்க வரும்போது எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் நிறைய இருந்தன. அந்த கண்ணீர் ஓடையை தாண்டிதான் வந்துகொண்டிருக்கிறேன். அதெல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. 

சிலம்பரசன் போகப்போகும் தூரம் எனக்குத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தை வழிநடத்தும் தலைமை இருப்பதால் இன்னும் பொறுப்புகளுடன் சிலம்பரசன் நடந்துகொள்ள வேண்டும். இது சுமையல்ல. சுகம். அதை நீங்கள் அனுபவியுங்கள். அசோக் செல்வன் சொன்னாரே, என் விஸ்வரூபம் படம் வெளியாக போராடியவர் என. எனக்கே தெரியாமல் அப்படி பல ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன். முதல்வராக வரவில்லை. ஒரு எம்எல்ஏ என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நாங்கள் 40 ஆண்டுகளாக தமிழகத்தில் மெல்ல மெல்ல செய்துகொண்டிருக்கிறோம். நாங்கள் தனிமனிதர்கள் அல்ல. என்னுடன் வளர்ந்த தம்பிகளெல்லாம் இன்று சமூகத்தில் பெரிய மனிதர்களாக நடந்துகொண்டிருப்பது பெருமையாக இருக்கிறது. உங்கள் தம்பிகளையும் நீங்கள் அப்படி நடக்க வைக்க வேண்டும் எஸ்டிஆர்” எனக் கூறினார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *