'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் 'கும்ப கும்ப' என்ற பாடல் வெளியானது

'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் 'கும்ப கும்ப' என்ற பாடல் வெளியானது


சென்னை,

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மண்டேலா’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘போட், தி கோட், டீன்ஸ்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி, தி ராஜா சாப், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது யோகிபாபு ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். யோகி பாபுவுடன் செந்தில், அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ‘சகுனி’ படத்தை இயக்கிய ஷங்கர் தயாள் இயக்கி இருக்கிறார்.சமீபத்தில் இப்படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ‘கும்ப கும்ப’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை மானசி பாடியுள்ளார். பாடல் வரிகளை சங்கர் தயாள் எழுதியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *