குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்த நடிகர் தனுஷ்

குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்த நடிகர் தனுஷ்


நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் வரும் அக்டோபர் 1ம் தேதியன்று அவரது 52வது திரைப்படமான ‘இட்லி கடை’ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள அவரது குலதெய்வ கோயில்களில் இன்று நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார். முதலாவதாக காலை ஆண்டிபட்டி அருகே முத்துரங்கபுரம் கிராமத்தில் உள்ள தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரிராஜாவின் குலதெய்வ கோயிலான ஸ்ரீ கஸ்தூரியம்மாள், ஸ்ரீ மங்கம்மாள் மற்றும் ஸ்ரீ கருப்பசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

அதனைத் தொடர்ந்து தனுஷின் சொந்த ஊரான போடிநாயக்கனூர் அருகே மல்லிங்காபுரம் கிராமம் செல்லும் சாலையில் சங்கராபுரம் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் தனுஷ் சுவாமி தரிசனம் செய்தார். போடிநாயக்கனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற இக்கோயில் அவரது தாய் விஜயலட்சுமியின் குலதெய்வ கோயிலாகும். இங்கு தனது பெற்றோர்களான கஸ்தூரிராஜா – விஜயலட்சுமி, மகன்கள் யாத்ரா – லிங்கா மற்றும் சகோதரர் செல்வராகவன் உள்ளிட்டோரும் குலதெய்வ வழிபாடு செய்து புறப்பட்டுச் சென்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *