"குற்றம் புதிது" படத்தின் டீசர் வெளியானது

சென்னை,
அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் குற்றம் புதிது. இதில் காதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார். மேலும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், டார்லிங் நிவேதா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அதிரடியாக உருவாகியுள்ள இந்த படம் “கற்பனைக்கு அப்பாற்பட்டதை எதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது.
மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 29ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.