"குற்றம் கடிதல் 2" படத்தின் டீசர் வெளியீடு

சென்னை,
கடந்த 2015-ம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் உருவான ‘குற்றம் கடிதல்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படத்திற்கு தமிழில் சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கல்விப் பின்னணியில் வெவ்வேறு வாழ்க்கைத்தரங்களில் வாழும் மனிதர்கள் குறித்தும் ஓர் எதிர்பாராத நிகழ்வு இவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் மையப்படுத்தியிருந்தது. திரைக்கு வருவதற்கு முன்பே பல சர்வதேச திரைவிழாக்களில் பங்கேற்று அங்கீகாரம் பெற்ற இப்படம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதையும் வென்று அசத்தியது.
‘குற்றம் கடிதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளனர். தயாரிப்பாளர் ஜேஎஸ்கே தயாரித்து திரைக்கதை எழுதிய இப்படத்தை எஸ்கே ஜீவா இயக்கியுள்ளார். எஸ்கே ஜீவா பார்த்திபன் நடித்த ‘புதுமைப்பித்தன்’, கார்த்திக் நடித்த ‘லவ்லி’ படங்களை இயக்கியுள்ளார். ஜேஎஸ்கே, அப்புக்குட்டி, பாலாஜி, சாந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜேஎஸ்கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் ஆரோகணம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,பரதேசி, ரம்மி ,புரியாத புதிர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள சதீஷ்குமார், ‘தரமணி’, ‘பேரன்பு’ ,’அநீதி’ உள்பட சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் தற்போது அவர் ஹீரோவாக நடித்துள்ளார். முதல் பாகத்தை தயாரித்த சதீஷ்குமார் 2ம் பாகத்தின் நாயகனாக மாறியுள்ளார். இந்த படத்திற்கு டிகே இசையமைத்துள்ளார்,
இந்நிலையில், ‘குற்றம் கடிதல் 2’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.