‘குபேரா’ படத்திலிருந்து ‘என் மகனே’ பாடல் வெளியீடு

சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப். ஹரீஷ் பேரடி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அமீகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நாளை பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின. இந்த நிலையில், தற்போது 4-வது பாடலான ‘என் மகனே’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை விவேகா எழுதியுள்ளார். பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ளார்.