குபேரா படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ்

சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 20-ம் தேதி பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தணிக்கை வாரியம் குபேரா படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 2 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.