'குபேரா' படத்தின் டீசர் வெளியீடு

'குபேரா' படத்தின் டீசர் வெளியீடு


சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், ‘ராயன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘போய்வா நண்பா’ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை விவேகா எழுத, தனுஷ் பாடியுள்ளார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *