குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்.. இத்தனை கோடியா?

குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்.. இத்தனை கோடியா?


ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பின் பொழுது, மானை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1998-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் 2018-ம் ஆண்டு 5 ஆண்டு சிறை தண்டனை என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது. பின்னர் அவருக்கு ஜாமீனும் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பாலிவுட் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான் மீது கடந்த சில ஆண்டுகளாக கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அவர் வெளியே எங்கு சென்றாலும் குண்டு துளைக்காத காரில்தான் செல்கிறார். தன்னுடைய வீட்டிலும் குண்டு துளைக்காத கண்ணாடிகளை பொருத்தி இருக்கிறார். படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் அவர் தனக்கு பாதுகாப்பாக, சொந்தமாக பாதுகாவலர்களை வைத்திருக்கிறார். மும்பை போலீசும் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில் தனக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை உணர்ந்த சல்மான்கான், சமீபத்தில் மேலும் ஒரு குண்டு துளைக்காத காரை புதியதாக வாங்கியிருக்கிறார். ‘மெர்சிடஸ் மேபச் ஜி.எல்.எஸ். 600’ என்ற அந்த காரின் விலை ரூ.3 கோடியே 40 லட்சம் ஆகும். இந்த கார் மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது. இந்தக் காரில், தானியங்கி கியர் பாக்ஸ் வசதியும் இருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *