"குட் பேட் அக்லி" பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

"குட் பேட் அக்லி" பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

கடந்த 28-ம் தேதி வெளியான இப்படத்தின் டீசர், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்தது.

இந்த நிலையில், பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்புடன் ‘குட் பேட் அக்லி’ டீசர் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘ஓஜி சம்பவம்’ என்கிற பர்ஸ்ட் சிங்கிள் வருகிற 18 ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *