"குட் பேட் அக்லி" படத்தின் "ஓஜி சம்பவம்" புரோமோ வெளியீடு

"குட் பேட் அக்லி" படத்தின்  "ஓஜி சம்பவம்" புரோமோ வெளியீடு


சென்னை,

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் 24 நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்தது. படத்தின் முதல் பாடலான ‘ஓஜி சம்பவம்’ நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ‘ஓஜி சம்பவம்’ பாடலுக்கான புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *