"குட் பேட் அக்லி" படத்தின் வசூலால் திரைகள் அதிகரிப்பு

"குட் பேட் அக்லி" படத்தின் வசூலால் திரைகள் அதிகரிப்பு


சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,000-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இப்படம் முதல் நாளில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 30.9 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனிவரும் நாட்கள் வாரவிடுமுறை தினங்கள் என்பதால் படத்தின் வசூல் மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை உள்பட பல நகரங்களில் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கான திரைகள் மற்றும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரக் காட்சிகளும் ஹவுஸ்புல்லாக இருப்பதால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் மிக லாபகரமான படமாக ‘குட் பேட் அக்லி’ இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *