‘குட் பேட் அக்லி’ படக்குழுவுக்கு வாழ்த்து கூறிய பிரபலம்

சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், சமீபத்தில் திரிஷாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.
இந்த சூழலில், கடந்த 28-ம் தேதி ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் இணையத்தில் வைரலானநிலையில், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ‘குட் பேட் அக்லி’ படக்குழுவுக்கு வாழ்த்து கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
‘குட் பேட் அக்லி’ டீசர் டார்க் ஷேடுடன் புல் எனர்ஜியுடன் இருக்கிறது. பெரிய வெற்றிக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்திருக்கிறார்.