குடும்பத்தினர் தகவல் | family reports

சென்னை,
இயக்குநர் இமயம் பாரதிராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், பாரதிராஜா தற்போது நலமாக உள்ளார் என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவருடன் இருந்து கண்காணித்து வருகிறோம், அவரது உடல்நிலை குறித்து சரியான தகவல்கள் அவரது எங்கள் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, அவரது உடல்நிலை குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.






